இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும், செய்தவற்றையும், செய்யத் தவறியவற்றையும், செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுவதாக இருக்கிறது. சிறு குழந்தைகளின் மனம் உன்னதமானது. பள்ளிக்கூடம் (online வகுப்பாக இருந்தாலும்) போக மறுத்தலும், அக்கம்பக்கத்து குழந்தைகளோடு அடித்துப் பிடித்தலும், பொம்மைக்கு போட்டி இடுதலும் என பல வகையான ‘கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கிடையில்’ அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நமக்குத் தவிர்க்க முடியாத ஈர்ப்பு; குழந்தைகளின் மனம் அளவிற்கு பெரியவர்களின் மனம் பிறந்த நாளை […]
இன்று ஒரு ஆசனம் (95) – விபரீதகரணீ (Legs Up the Wall Pose)

ஆசனங்களின் அரசன் என அழைக்கப்படும் சிரசாசனம் மற்றும் ஆசனங்களின் அரசி என்று அழைக்கப்படும் சர்வாங்காசனம் ஆகியவற்றைப் பயில முடியாதவர்கள் விபரீதகரணியைப் பயில்வதன் மூலம் மேற்கண்ட ஆசனங்களின் பலன்களின் பெரும்பாலானவற்றை அடையலாம். இவ்வாசன நிலையை மிக எளிதாக அனைவரும் செய்யும் முறை கீழே குறிப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. (சர்வாங்காசனம் செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). வடமொழியில் ‘விபரீத’ என்றால் ‘தலைகீழ்’ என்றும் ‘கரணீ’ என்றால் ‘செய்தல்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Legs Up the Wall […]
இன்று ஒரு ஆசனம் (91) – ஹலாசனம் (Plough Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது பொதுவாக சர்வாங்கசனத்திற்குப் பின் செய்யப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose (Plow Pose) என்று அழைக்கப்படுகிறது. ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் வளர்கிறது; அன்பு, பரிவு […]
இன்று ஒரு ஆசனம் (64) – சக்ராசனம் (Wheel Pose)

பின் வளைந்து செய்யும் ஆசனங்களில் சவாலான ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும், இவ்வாசனத்தில் உடல் சக்கரமாக வளைந்திருக்கும் என்று. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. சக்ராசனம் உடலில் உள்ள முக்கியமான எட்டு சக்கரங்களையும் (ஏழு முக்கிய சக்கரங்கள்தானே என்று நினைக்கிறீர்களா, விரைவில் இது பற்றி எழுதுவோம்) தூண்டுவதால், இவ்வாசனம் மிகவும் வலிமையான ஆசனமாகவும் உடலுக்கு ஆற்றலைத் தரும் ஆசனமாகவும் ஆகிறது. சக்ராசனம் பழகுவதால் முழு உடலுக்குமே அற்புதமான அளவில் பயிற்சி கிடைக்கிறது. சக்ராசனத்தின் […]
இன்று ஒரு ஆசனம் (58) – வீரியஸ்தம்பன் ஆசனம் (Virya Stambhan Pose)

வடமொழியில் ‘வீரிய’ என்றால் ‘பலம்’ என்று பொருள்; ‘ஸ்தம்பன்’ என்பது முதுகுத்தண்டைக் குறிக்கும். ஆக இது முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் ஆசனமாகும். ‘வீரிய’ என்ற சொல்லுக்கு ‘விந்தணு’ என்ற பொருளும் உண்டு. வீரியஸ்தம்பன் ஆசனம் பயில்வதால் விந்தணு பெருகும். வீரிய ஸ்தம்பன் ஆசனம் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டுகிறது. இச்சக்கரம் தூண்டப் பெறுவதால் படைப்புத் திறன் மேம்படும், மகிழ்ச்சி பெருகும், உடலுறவு சார்ந்த கோளாறுகள் நீங்கும். பிறருடனான உறவில் நேர்மையும் நம்பகத்தன்மையும் வளரும். வீரிய ஸ்தம்பன் ஆசனத்தின் மேலும் சில […]