உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஆண்களில் இளம் வழுக்கை உள்ளவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் கூடியிருப்பது தெரிய வருகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு காரணங்களால் தலைமுடி உதிர்வு சமீப வருடங்களில் அதிகமாகி இருப்பதையும் அறிய முடிகிறது. தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆசனங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள்
நாளொன்றுக்கு 50 முதல் 100 முடி வரை உதிர்வது இயற்கையானது. ஆனால், தலைமுடியின் அடர்த்தி குறையும் அளவிற்குச் செல்லும் போது அதுவே தலைமுடி இழப்பு என்று கருதப்படுகிறது.
தலைமுடி உதிர்வுக்கான காரணங்களில் சில:
- ஊட்டச்சத்து குறைபாடு
- தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் கோளாறுகள்
- மரபியல் (genetics)
- உச்சந்தலைப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுகள்
- தன்னுடல் தாக்கு நோய் (autoimmune disorder)
- மன அழுத்தம்
- சில வகையான மருந்து மற்றும் சிகிச்சைகள்
யோகா எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது?
இயற்கையான முறையில் தலைமுடி இழப்பை சரி செய்யவும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டவும் யோகப்பயிற்சி பெருமளவில் உதவுகிறது.
தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் பலவற்றையும் யோகப்பயிற்சி நீக்குவதால் தலைமுடி இழப்பு சரியாவதோடு தலைமுடி வளர்ச்சியும் சிறப்பாக நடைபெறுகிறது.
தொடர்ந்து யோகாசனங்களைப் பழகும் போது ஹார்மோன் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
தன்னுடல் தாக்கு நோய் அறிகுறிகளைப் போக்க ஆசனங்கள் உதவுவதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகளும் அறிவிக்கின்றன.
குறிப்பிட்ட ஆசனங்கள் தலைமுடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியை ஊட்டமாக்கி தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
யோகாசனம் பயில்வதால் மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. எனவே மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தலைமுடி உதிர்வுக்கு யோகா சிறந்த இயற்கை நிவாரணியாகத் திகழ்கிறது என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் யோகாசனங்கள்
தலைமுடி உதிர்வை இயற்கை முறையில் போக்கி அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும் ஆசனங்களில் சில:
1) உத்தானாசனம்

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆசனமான உத்தானாசனத்தின் செய்முறையையும் மற்ற பலன்களையும் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) அதோ முக ஸ்வானாசனம்

மன அழுத்தத்தைப் போக்கவும் தலைப்பகுதிக்கு அதிக இரத்த ஓட்டத்தை செலுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெறவும் உதவும் அதோ முக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) வஜ்ஜிராசனம்

செரிமானக் கோளாறுகளால் தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தை உடல் கிரகிக்காமல் போகும் வாய்ப்புண்டு. வஜ்ஜிராசனம் பழகுவதால் செரிமானக் கோளாறுகள் சரி செய்யப்படுகிறது. வஜ்ஜிராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) பாலாசனம்

பாலாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) சர்வாங்காசனம்

ஆசனங்களின் அரசியான சர்வாங்காசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) மத்ஸ்யாசனம்

இயற்கையான முறையில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் ஆசனங்களில் ஒன்றான மத்ஸ்யாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) விபரீதகரணீ

விபரீதகரணீயின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
தலைமுடி உதிர்வைப் போக்கி இயற்கையான முறையில் தலைமுடி வளர்ச்சி பெற உதவும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதோடு சத்தான உணவுகளை உட்கொண்டால் மிக விரைவில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

கடினமான வேலைநாளின் மாலையில் செய்ய அருமையான ஆசனங்கள்
கடினமான வேலை முடிந்து வீடு திரும்பியதும், நமக்கு ஓய்வு மிகவும் அவசியமே. அதே நேரத்தில் அன்றைய நாள் முழுவதும் கடின வேலை செய்ததன் விளைவாக உடலில் தோன்றும் இறுக்கத்தைப் போக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் குறிப்பிட்ட ஆசனங்கள் பெருமளவில் உதவுகின்றன. கடினமான வேலைநாளின் மாலையில் செய்ய அருமையான ஆசனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

காலை நேர சோர்வைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள்
சில காலைப் பொழுதுகள் நமக்கு சோர்வாக விடிவதுண்டு. அதற்கான முக்கிய காரணங்கள், சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக மாற நாம் செய்யக் கூடிய ஆசனங்கள் குறித்து பார்க்கலாம்.

சோர்வாக இருக்கும் போது பயில 5 அற்புத பலன்கள் தரும் ஆசனங்கள்
சோர்வாக உணரும் போதெல்லாம் நம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதான் தேவை என்பதல்ல. சில சமயங்களில், போதுமான இரத்த ஓட்டம் மற்றும் பிராண ஓட்டம் இல்லாததாலோ, மன அழுத்தத்தாலோ நீண்ட நேரத்திற்கு அமர்ந்து பணி செய்வதாலோ






