செல்லப்பிராணி குடும்ப உறுப்பினர் ஆகும் போது…

சில மாதங்களாகத் தொடர்ந்து பதிவுகளை உருவாக்கவும் வெளியிட முடியாமலும் போனதற்கான முக்கிய காரணம், எங்கள் வீட்டின் புதிய உறுப்பினரான எங்களின் செல்லப்பிராணி. சரி, முக்கிய காரணம் அதுவென்றால் மீதி காரணங்கள் என்ன என்று கேட்கிறீர்களா. எங்களின் புது வரவுதான் மீதி காரணங்களும். ஆம், எங்கள் வீட்டின் புதிய வரவு எங்கள் மனங்களையும் நேரத்தையும்  தடாலடியாக ஆக்கிரமித்துக் கொண்டது. எங்களின் உடற்பயிற்சி நேரம் முதல் எங்களின் ஓய்வு நேரம் வரை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தது […]

கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகளில் சிலவற்றைப் பற்றி இன்று பார்க்கலாம். முத்திரைகள் எவ்வாறு கழுத்து வலியைப் போக்குகின்றன? குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து இறுக்கத்தைப் போக்குவதன் மூலமும், கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுத் தசைகளைப் பலப்படுதுவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன. மேலும் மேல் முதுகுத்தண்டைப்  பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது. கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள் கழுத்து வலியிலிருந்து […]

நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள்

முந்தைய பதிவுகளில் நுரையீரலைப் பலப்படுத்தும் ஆசனங்கள், நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகள் மற்றும் நுரையீரலைப் பலப்படுத்தும் பிராணாயாமம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றிப் பார்க்கலாம். எசன்சியல் எண்ணெய்கள் எவ்வாறு நுரையீரலைப் பலப்படுத்த உதவுகின்றன? Photo courtesy: Photo by Monstera from Pexels எசன்சியல் எண்ணெய்கள் antiviral, antibacterial, anti-inflammatory, bronchodilator மற்றும் mucolytic உள்ளிட்ட பல தன்மைகள் கொண்டவை. எனவே, இவை சுவாசக் குழாய் கோளாறுகளைப் போக்க உதவுகின்றன என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளதை […]

நுரையீரல்களைப் பலப்படுத்தும் முத்திரைகள்

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பல்வேறு அருமையான கலைகளில் ஒன்று முத்திரைக் கலை. உலகளவில் பல்வேறு கலாச்சாரங்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயின்று வரப்படும் முத்திரைகளில் நுரையீரல்களைப் பலப்படுத்தும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். அதற்கான தேவையும் இக்காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது. நுரையீரல்களைப் பலப்படுத்தும் பிராணாயாம வகைகள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைப் போக்கி நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகளின் ஆற்றல் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா பிரச்சினை உள்ள 50 பேர்கள் […]

நுரையீரல்களைப் பலப்படுத்தும் பிராணாயாம வகைகள்

யோகப் பயிற்சியின் இன்றியமையாத அங்கமான பிராணாயாமம் உடல், மன நலனைப் பாதுகாக்க உதவுகிறது. பொதுவாகவே பிராணாயாமப் பயிற்சிகள் நுரையீரல்களைப் பலப்படுத்தும் என்றாலும்,  நுரையீரல் நலனைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் குறிப்பிட்ட சில பிராணாயாம வகைகளைப் பயில்வது மிகச் சிறந்த பலனைத் தருகின்றது. 91 இளம், ஆரோக்கியமான தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட 12-வார ஆய்வு  ஒன்றின் மூலம் பிராணாயமப் பயிற்சி நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கொண்ட 50 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வு […]

தமிழ்