மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

மன அழுத்தம் உடல், மன நலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ‘மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்’ என்கிற பதிவில் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் குறித்துப் பார்க்கலாம். (மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றி அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் எசன்சியல் எண்ணெய்களின் பயன்பாடுகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளன. மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சில […]

மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில் மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றை நீக்கி மனதைப் புத்துணர்வோடு வைத்து மன அமைதியைப் பெற கீழ்க்கண்ட முத்திரைகளைப் பழகி வரவும்.  1) சின் முத்திரை செய்முறை பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். சுட்டும் விரல் மற்றும் கட்டை விரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.  […]

தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

தலைவலியினால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவறான நிலையில் தொடர்ந்து அமர்தல் (poor posture), மலச்சிக்கல், அசீரணம், ஹார்மோன் கோளாறுகள்,  மன அழுத்தம் என தலைவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. மருந்துகள் உட்கொள்ளாமல் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளை இயற்கையான முறையில் போக்கிக் கொள்ளவும் தவிர்க்கவும் முடியும். தலைவலியைப் போக்கும் யோகாசனங்கள் சீரண மண்டலத்தை மேம்படுத்துதல், இரத்த ஓட்டத்தை சரி செய்தல், மன அழுத்தத்தைப் போக்குதல் ஆகியவற்றின் மூலம் தலைவலியைப் போக்க உதவுகின்றன. […]

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாயங்களை நாம் அடையும் அதே நேரத்தில் இயற்கையோடு ஒன்றிய வாழ்விலிருந்து பெரும்பாலும் விலகி விடுகிறோம். நம் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள். இதன் தாக்கம் உடல், மன நலத்தில் வெளிப்படுகிறது. உலகளவில் தலைவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. முன்பெல்லாம் அபூர்வமாக இருந்த மைக்ரேன் தலைவலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், இதற்காக மருந்துகளை நாடாமல் வீட்டு மருத்துவத்திலேயே தலைவலியைப் போக்கிக் கொள்ளலாம். இன்று, மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் இயற்கை மருத்துவம் […]

விடியல்

சிறு வயதில் மழை நாட்களில் பள்ளிக்கூடத்துக்குக் ‘குடைவெளியில்’ நனைந்து சென்ற போதும், சென்ற பின் விடுமுறை அளிக்கப்பட்டு நனைந்தே வீட்டுக்கு வந்த போதும் மனதில் மழை தந்த உற்சாகம்தான் நிரம்பியிருந்தது. இதில் பல நாட்கள் விடுமுறை அறிவித்த பின் மழை நின்று வெயில் அடித்ததும் உண்டு. மழை பற்றிய வானொலி அறிவிப்புகளும், புயல் அபாய எச்சரிக்கைகளும், அம்மா கொடுத்த சூடான பஜ்ஜிகளும் மழை நாட்களில் அதிக மழையையும் மேலும் பலத்த காற்றையும் எதிர்பார்க்கவே வைத்தன. ஆனால், இந்த […]

தமிழ்