இன்று ஒரு ஆசனம் (100) – சிரசாசனம் (Headstand)

‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியில் 100-வது ஆசனமாக நாம் பார்க்கவிருக்கும் சிரசாசனம், ‘ஆசனங்களின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.. வடமொழியில் ‘சிரச’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Headstand என்று அழைக்கப்படுகிறது. (ஆசனங்களின் அரசி என அழைக்கப்படும் சர்வாங்காசனத்தைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). புவியீர்ப்பு ஆற்றலுக்கு எதிரான நிலையில் செய்யப்படும் சிரசாசனம் அற்புதமான பலன்களை அளிக்கக் கூடியது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா […]
இன்று ஒரு ஆசனம் (99) – அர்த்த சிரசாசனம் (Half Headstand / Upward Facing Staff Pose)

இன்றைய ஆசனமான அர்த்த சிரசாசனம் என்பது சிரசாசனத்தின் பாதி நிலை. வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘சிரசு’ என்றால் ‘தலை’. அர்த்த சிரசாசனம், ஆங்கிலத்தில் Half Headstand என்று குறிப்பிடப்படுவதோடு, நாம் முன்னர் பார்த்திருக்கும் தண்டாசனத்தின் (Staff Pose) தலைகீழ் நிலையாக இது இருப்பதால், Upward Facing Staff Pose என்றும் அழைக்கப்படுகிறது. அர்த்த சிரசாசனம் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்களைத் தூண்டுகிறது. சஹஸ்ரார சக்கரம் தூண்டப்படும் போது நிலையான தன்மையும், தன்னை […]
இன்று ஒரு ஆசனம் (98) – த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம் (One Leg Folded Forward Bend)

வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘அங்க’ என்றால் ‘அங்கம்’, ‘முக’ என்றால் ‘முகம்’, ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘பாதம்’, ‘பஸ்சிமா’ என்றால் ‘மேற்கு’, ‘உத்தானா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ என்று பொருள். நாம் முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கும் பஸ்சிமோத்தானாசனத்தையும் ஜானு சிரசாசனத்தையும் ஓரளவு ஒத்த ஆசனமாகும். இது ஆங்கிலத்தில் One Leg Folded Forward Bend என்று அழைக்கப்படுகிறது. (பஸ்சிமோத்தானாசனம் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). (ஜானு சிரசானம் பற்றிப் பார்க்க, இந்தப் […]
இன்று ஒரு ஆசனம் (97) – உபவிஸ்த கோணாசனம் (Wide Legged Seated Forward Fold)

இதற்கு முன்னர் நாம் சில கோணாசன வகைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உபவிஸ்த கோணாசனம். வடமொழியில் ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். உபவிஸ்த கோணாசனம் ஆங்கிலத்தில் Wide Legged Seated Forward Fold என்றும் Wide Angle Seated Forward Bend என்றும் அழைக்கப்படுகிறது. உபவிஸ்த கோணாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர சக்கரங்களின் இயக்கம் […]
இன்று ஒரு ஆசனம் (96) – இராஜ புஜங்காசனம் (King Cobra Pose)

இதற்கு முன்னர் நாம் புஜங்காசனம் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம் போன்றதொரு சவாலான ஆசனமான இராஜ புஜங்காசனம் ஆகும். வடமொழியில் ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’ என்று பொருள். புஜங்காசனம் பற்றிய பதிவில் பாம்பின் பெயர் சூட்டப்பட்டதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. (புஜங்காசனம் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இராஜ புஜங்காசனத்தில் மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. எனவே, இவ்வாசனம் பயில்வதால் […]