உடல் மன ஆரோக்கியம்

மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சமீப வருடங்களில் மண்பானை மறுபிறப்பு எடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழும் ஊர்ப்புறங்களில் கூட மண்பானை சமையல் குறைந்திருந்த வேளையில், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வின் காரணமாய் சமையலறையில் மண்பானைகள் மீண்டும் தோன்றத் தொடங்கி விட்டன. கேன் தண்ணீர் பயன்பாட்டிற்கு வந்ததும் மண்பானை பரண் ஏறிய நிலை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. இன்றைய பதிவில் மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

benefits of drinking earthen pot water

Source: https://www.freeimages.com/photo/jars-1177749

மண்பானை தண்ணீர் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் சில:

1) மண்பானை இயற்கையான குளிர்ச்சி தருகிறது

மண்பானை இயல்பான குளிரூட்டும் தன்மை கொண்டது. மண்பானையில் உள்ள என்ணற்ற நுண்துளைகள் வழியாக பானையின் நீர் வெளியேறி ஆவியாகிறது. அவ்வாறு ஆவியாகத் தேவைப்படும் ஆற்றலை, அதாவது, வெப்பத்தை, பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்கிறது. இதன் காரணமாக, பானையில் உள்ள நீர் வெப்பம் குறைந்து குளிர்ச்சியடைகிறது. இதன் காரணமாக கடுமையான கோடை வெயிலிலும் மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாகவே இருக்கும்.

காற்றில் ஈரப்பதம் அதிகமாயிருக்கும் போது பானை தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறையும் போது, பானையிலுள்ள தண்ணீரின் குளிர்ச்சி குறைவாகவே இருக்கும்.

2) மண்பானை தண்ணீரின் தரத்தை மேம்படுத்துகிறது

இயற்கையின் கொடையான களிமண்ணால் செய்யப்படும் மண்பானைகள் இயல்பாகவே நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆகையால், மண்பானைகளில் வைக்கப்படும் குடிநீர் மேம்படுத்தப்பட்ட தரத்தோடு, சுத்தமானதாக, உடலுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது.

3) மண்பானை தண்ணீர் சத்துகளை அதிகரிக்கிறது

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்துகளை களிமண் பானை தண்ணீரில் வெளிவிடுகிறது. ஆக, மண்பானை தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு இந்த சத்துகள் இயல்பாகவே கிடைக்கின்றன.

பல வகையிலான மண்பானைகள் கடைகளிலும் இணையதளம் மூலமாகவும் விற்கப்படுகின்றன. மண்பானைகளை அமேசானில் வாங்க விரும்புவோர் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) செரிமானத்தை மேம்படுத்துகிறது

மண்பானை தண்ணீர் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. களிமண்ணின் காரத்தன்மை, நம் வயிற்றின் அமிலத் தன்மையை சமன்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், களிமண்ணில் இருக்கும் தாதுக்களும் உப்புகளும் வயிற்று பொருமல், மலச்சிக்கல், அமிலப் பின்னோட்ட நோய் உள்ளிட்ட சீரண கோளாறுகளைச் சரி செய்கிறது.

அமிலப் பின்னோட்ட நோய் தீர்க்கும் ஆசனங்கள் குறித்து பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது

மண்பானை தண்ணீர் கழிவுகள் வெளியேற்றத்துக்கு உதவுவதன் மூலம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.  இதன் காரணமாக நோய் எதிர்க்கும் ஆற்றல் வளர்கிறது.

6) சுற்றுச்சூழலுக்கு உகந்தது

மண்பானைகள் தயாரிப்பு முறையிலும் சரி, அதன் பயன்பாடு மொத்தமும் முடிந்த பின்புச் சரி, சுற்றுசுழலுக்கு எந்த ஒரு மாசையும் உண்டாக்காமல் இருக்கும்.

மேலும் வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்படும் ஆடுகளின் உடலிலும் நடவடிக்கையிலும் மண்பானை தண்ணீரினால் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதை ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. மண்பானை தண்ணீர் பருகுவதால் வெப்ப அழுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான ஆடுகளின் உடல் எடை குறைதல் தடுக்கப்பட்டதோடு, அவற்றின் வளர்ச்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் நலமும் முன்னேறியதாக ஆய்வு அறிவுத்துள்ளது.

புது மண்பானையை பயன்படுத்தத் துவங்கும் முன்

புதிதாக மண்பானையை வாங்கியதும் செய்ய வேண்டியவை:

  • பானையை நன்றாக தண்ணீரில் கழுவி, தேங்காய் நார் அல்லது ஸ்க்ரப்பர் பயன்படுத்தி பானைக்கு உள்ளேயும் வெளியேயும் தேய்த்து பின் கழுவவும். சோப் உள்ளிட்ட எந்த ரசாயனத்தையும் பயன்படுத்தக் கூடாது. 
  • பெரிய வாளியில் தண்ணீர் நிரப்பி பானையை அதனுள் வைக்கவும். பானை முழுவதும் தண்ணீர் நிரப்பவும். இப்போது பானையின் உள்ளும் புறமும் தண்ணீர் இருக்கும்.
  • மொத்தமாக மூன்று நாட்களுக்கு, தினமும் தண்ணீரை மாற்றி ஊற வைக்கவும்.
  • மூன்றாம் நாள் முடிவில், மண்வாசனை முழுவதுமாக நீங்கி பானையும் பயன்பாட்டிற்கு ஏற்றதாகி விடும்.
மண்பானை நீரில் வெட்டிவேர்

வெட்டிவேரை சேர்த்த மண்பானை தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குளிர்ச்சியைத் தரும் வெட்டிவேர் பல அற்புதமான பலன்களைக் கொண்டது. வெட்டிவேரை நன்றாக அலசி, ஒரு சிறு வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் நிரப்பி வைத்துள்ள மண்பானையில் போடவும். சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குப் பின் இந்த தண்ணீரைப் பருகலாம். வெட்டிவேருடன் சிறிது கருஞ்சீரகத்தையும் சேர்த்து மூட்டை கட்டி மண்பானை தண்ணீரில் போடலாம்.

நம் நலம், நாம் வாழும் இந்த உலகின் நலம் ஆகியவற்றை மனதில் கொண்டு மண்பானை தண்ணீரையே பருகுவோம், பலன் பெறுவோம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

கொழுப்பு சத்தின் நன்மைகளும் கொழுப்பு குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவுகளில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் புரதச் சத்தின் நன்மைகள் குறித்து பார்த்தோம். இன்று கொழுப்புச் சத்தின் நன்மைகள் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர் உணவின் நன்மைகள்

Read More »

பழைய சோறின் நன்மைகள்

காலை உணவாக பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலம் மாறி இப்போது சிற்றுண்டிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. பல வீடுகளிலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற சிற்றுண்டிகளும் அபூர்வமாய் ஒரு சில வீடுகளில்

Read More »

புரதச் சத்தின் நன்மைகளும் புரதக் குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள் குறித்து பார்த்தோம். இன்று, புரதத்தின் நன்மைகள், புரதக் குறைபாடால் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்