உடல் மன ஆரோக்கியம்

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்; மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். மலச்சிக்கல் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்ற மனரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி, “கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த போது” ஒரு யோசனை வந்ததாகக் கூறுவதில் உண்மையிலேயே நகைச்சுவை தாண்டிய உண்மையும் இருக்கிறது. மலம் கழிக்கும் போது மூளையின் சுறுசுறுப்பு அதிகரிப்பதை உங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். இன்று நாம், மலச்சிக்கலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்ப்போம்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்

மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்களில் சில:

 • மலம் வரும் உணர்வை அடக்குதல்
 • துரித வகை உணவுகளை உண்ணுதல்
 • நார்ச்சத்து குறைவான உணவுகளை எடுத்தல்
 • உடற்பயிற்சி இன்மை
 • குறைவான அளவு தண்ணீர் குடித்தல்
 • அசீரணக் கோளாறுகள்
 • Parkinson’s உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகை நோய்கள்
 • வலி நிவாரணிகள்
 • தைராய்டு குறைவாக சுரத்தல்
 • மன அழுத்தம்

மலச்சிக்கலின் விளைவுகள்

மலச்சிக்கல் நோய் எதிர்ப்புத் திறனை பாதிப்பதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது. மூலம், ஆசனவாய் வெடிப்பு போன்றவையும் மலச்சிக்கலால் ஏற்படலாம்.

யோகா எப்படி மலச்சிக்கலைப் போக்குகிறது?

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் சீரண மண்டலத்தின் இயக்கத்தை செம்மையாக்குகின்றன. இரத்த ஓட்டத்தையும் பிராண வாயு ஓட்டத்தையும் சீர் செய்வதோடு குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகின்றன.  மேலும், யோகா மன அழுத்தத்தைப் போக்க உதவுவதால் மன அழுத்தத்தினால் உண்டாகும் மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்களில் முக்கியமான சில:

1) பாதாங்குஸ்தாசனம்

பாதாங்குஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) வஜ்ஜிராசனம்

வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) நவாசனம்

நவாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) புஜங்காசனம்

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) பவன முக்தாசனம்

பவன முக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) ஹலாசனம்

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) மத்ஸ்யாசனம்

மத்ஸ்யாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர மலச்சிக்கல் நீங்கி உடல் மன நலம் மேம்படும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்