சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும் பரவலாக, உலகளவில் பெரும்பான்மையானவர்களைப் பாதிக்கக் கூடிய ஒன்றாக ஆகி விட்டது. கணினி பயன்பாடு, வேலை செய்யப் பயன்படுத்தும் மேசை நாற்காலி உயரம் போன்ற பலவும் பணி சார்ந்த கழுத்து வலி ஏற்படுவதற்கான சமீபத்திய காரணங்களில் சில. இன்றைய பதிவில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்களைப் பார்க்கலாம்.
கழுத்து வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
கணினி பயன்பாடு தொடர்பாக கழுத்தில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வலி, கழுத்து வலிக்கான முதன்மைக் காரணங்களில் இடம் பெறுகின்றன. கழுத்து வலிக்கான மேலும் சில முக்கிய காரணங்கள்:
- தவறான நிலையில் அமர்தல் மற்றும் படுத்தல்
- தசைப்பிடிப்பு
- மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள்
- எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள்
- கழுத்தில் அடிபட்டிருத்தல்
- மன அழுத்தம்
யோகா எவ்வாறு கழுத்து வலியைப் போக்குகிறது?
யோகாசனம் கழுத்து வலிக்கு அற்புதமாக நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வருபவர்கள் அமரும் நிலை நேர் செய்யப்படுவதால் தவறான முறையில் அமர்தல், படுத்தல் காரணமாக கழுத்து வலி ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
யோகாசனம் பயில்வதால் தசைப்பிடிப்பு சரியாகிறது. மூட்டு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகளும் சரியாகின்றன.
ஆசனங்கள் கழுத்து மற்றும் முதுகுத் தசைகளை வலுவாக்குவதன் மூலம் கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
தொடர்ந்து யோகாசனங்கள் பயில்வதால் மன அழுத்தம் நீங்கி மனதில் அமைதி ஏற்படுகிறது.
ஆய்வு முடிவுகள் சிலவும் யோகப் பயிற்சியின் மூலம் கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்கின்றன.
கழுத்து வலியைப் போக்கும் யோகாசனங்கள்
இந்தப் பகுதியில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இவ்வாசனங்களைச் செய்து வந்தால் கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
1) உத்தானாசனம்
உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) திரிகோணாசனம்
திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) உத்தித திரிகோணாசனம்
உத்தித திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) பரிவ்ருத்த திரிகோணாசனம்
பரிவ்ருத்த திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) வீரபத்ராசனம் 1
வீரபத்ராசனம் 1 பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) உஸ்ட்ராசனம்
உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) பிடிலாசனம்
பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) மர்ஜரியாசனம்
மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) வக்கிராசனம்
வக்கிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) பாலாசனம்
பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) புஜங்காசனம்
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
13) மத்ஸ்யாசனம்
மத்ஸ்யாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
14) விபரீதகரணீ
விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வருவதால் கழுத்து வலி நீங்குவதுடன், கழுத்து தசைகளும் வலுவாகும். எந்த ஆசனத்தைப் பயிலும் போது, உடலை வருத்தி செய்வதைத் தவிர்க்கவும். தேவையேற்பட்டால் yoga block போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் ஆசனம் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://hiiamchezhi.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
எசன்சியல் எண்ணெய்கள்
ஏடறிந்த வரலாறிலே சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பண்டைய கலாச்சாரங்களால் மருத்துவ காரணங்களுக்காகவும் அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்த எசன்சியல் எண்ணெய் சமீப வருடங்களில் மிகுந்த எழுச்சியோடு மறு அவதாரம் எடுத்திருக்கிறது. எசன்சியல்

சாமை தோசை
தோசை விரும்பிகளே! இதற்கு முந்தைய பதிவுகளில் சாமை உப்புமா மற்றும் சாமை கிச்சடி செய்முறைகளைப் பார்த்தோம் அல்லவா? உங்களுக்காக, இதோ சாமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சாமை தோசைக்கு மாவு அரைக்க

சாமை கிச்சடி
சாமையில் உப்புமா செய்வதைப் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இன்றைய பதிவில் சாமை கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.