அமிலப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் மிக அதிகமாகி வந்திருக்கிறது. நோர்வேயில் எடுக்கப்பட்ட நீண்ட கால ஆய்வின் மூலம் அமிலப் பின்னோட்ட நோய் பத்து வருடங்களுக்கு முன் இருந்ததை விட 50 சதவீதம் கூடியிருப்பதாக அறிய முடிகிறது. இந்த ஆய்வின் முடிவு வெளிவந்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

அமிலப் பின்னோட்ட நோய் உண்டாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இரைப்பை ஏற்றம் (hiatal hernia). இதைத் தவிர்த்து அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான ஏனைய முக்கிய காரணங்களில் சில:

  • தவறான உணவுப் பழக்கம்
  • உணவு உண்டபின் உடனடியாகப் படுத்தல்
  • அதிக உடல் எடை
  • காபி, டீ போன்ற சிலவகை பானங்கள்
  • மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
  • தூக்கமின்மை
  • தொடர் மன அழுத்தம்

யோகா எவ்வாறு அமிலப் பின்னோட்ட நோயைப் போக்க உதவுகிறது?

குறிப்பிட்ட யோகாசனப் பயிற்சிகள் மற்றும் கபாலபாதி போன்ற பிராணாயாமப் பயிற்சி உதரவிதானத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் அமிலம் உணவுக் குழாயில் சுரக்காமல் தவிர்க்கிறது. 

ஆசனம் பயில்வதால் அதிக உடல் எடையைக் குறைத்து சீரான உடல் எடையைப் பராமரிக்க முடிகிறது.

தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் பெற முடிகிறது. 

யோகப்பயிற்சி மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான பெரும்பாலான காரணங்களை யோகாசனப் பயிற்சி தவிர்ப்பதன் மூலம் இந்நோயைத் தீர்க்கவும் தவிர்க்கவும் உதவுகிறது.

அமிலப் பின்னோட்ட நோயைப் போக்கும் 11 ஆசனங்கள்

அமிலப் பின்னோட்ட நோயைப் போக்கும் ஆசனங்களில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.

1) திரிகோணாசனம்

திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) பரிவ்ருத்த திரிகோணாசனம்

பரிவ்ருத்த திரிகோணாசனம்

ப்ரிவ்ருத்த திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) பார்சுவோத்தானாசனம்

பார்சுவோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) வீரபத்திராசனம் 2

வீரபத்ராசனம் 2 பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) மர்ஜரியாசனம்

மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

6) வஜ்ஜிராசனம்

வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) உஷ்ட்ராசனம்

உஷ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

GreenFoods
9) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

10) ஹலாசனம்

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்கூறப்பட்டுள்ள 11 ஆசனங்களையும் தொடர்ந்து செய்து வர அமிலப் பின்னோட்ட நோயிலிருந்து விடுபடலாம்.

சரியான உணவுப் பழக்கம், ஆழ்ந்த உறக்கம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவை அமிலப் பின்னோட்ட ந்இப்பிரச்சினையிலிருந்து வேகமாக விடுபட உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்