கடுமையான உடல் உழைப்பு, மண்ணுக்கேற்ற உணவு, நல்ல ஓய்வு, மன அழுத்தமின்மை, நல்ல சுற்றுச்சூழல் ஆகிய அய்ந்தும் நம் முன்னோர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்க்கும் திறனை அளித்திருந்தன. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை வேறாக இருக்கிறது. போதாத குறைக்கு கொரோனாவின் கொட்டம் வேறு. பள்ளிக்கூடமும் அலுவலகமும் போய் வந்தது கூட சாத்தியப்படாமல் இப்போது ‘online schooling, ‘work from home’ என கொஞ்ச நஞ்ச நடவடிக்கைகளும் அற்றுப் போய் எந்நேரமும் அலைபேசியோடும் கணினியோடும் மன்றாடிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. இதன் காரணமாக நேரம் தப்பிய அவசர உணவு, ஓய்வின்மை, மன அழுத்தம் என பல இன்னல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் நாம் மெல்ல மெல்ல இழப்பது உடல், மன நலத்தை. மீட்பது சுலபம்தான் இப்பொழுதே விழித்தோமானால். இன்றைய பதிவில் நோய் எதிர்ப்புத் திறன் வளர்க்கும் ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம்.
யோகா எப்படி நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது?
ஆசனங்கள் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் உடல் உணவிலிருந்து சத்துக்களை நன்கு கிரகிக்கின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது. நாளமில்லா சுரப்புகளின் செயல்பாடுகள் மேம்படுவதில் ஹார்மோன் சமநிலை ஏற்படுகிறது. மேலும் ஆசனம் பயில்வதால் உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன.
ஆசனங்களோடு மூச்சுப் பயிற்சிகள் செய்து வர நுரையீரல்கள் பலம் பெற்று பிராண வாயு சீராக உடல் முழுவதும் செல்கிறது. இதனால் நோய் எதிர்ப்புத் திறன் மேம்படுகிறது.
மன அழுத்தம் ஏற்படும் போது நோய் எதிர்ப்புத் திறன் பாதிப்படைகிறது. இவ்வாறு பாதிப்படையும் போது தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் இயல்பாகவே குறைந்து நோய் உண்டாகிறது. ஆசனங்கள் பயில்வதால் மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க முடிவதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
நோய் எதிர்க்கும் திறனை அதிகப்படுத்தும் ஆசனங்கள்
1) உத்கடாசனம்
உத்கடாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
உத்கடாசனம் செய்வதில் சிரமம் இருந்தால் முதலில் சிறிது காலத்திற்கு அர்த்த உத்கடாசனம் பழகவும்.
2) பரிகாசனம்
பரிகாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) சிங்காசனம்
சிங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) சக்ராசனம்
சக்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) சதுரங்க தண்டாசனம்
சதுரங்க தண்டாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) புஜங்காசனம்
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) தனுராசனம்
தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) பாலாசனம்
பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) சர்வாங்காசனம்
சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) ஹலாசனம்
ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்தும் சத்தான உணவுகளை உண்டு, உடலுக்குத் தேவையான ஓய்வும் எடுத்து வர நோய் எதிர்ப்புத் திறன் விரைவில் மேம்படும்.