ஏலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள்

வாரா வாரம் பயணம் செய்து பயணப் பதிவுகளைப் பதிவேற்றம் செய்வது போன்ற உத்வேகத்துடன் ஊர்சுற்றி பக்கங்கள் பகுதியைத் துவக்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது. சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் பதிவைப் போட்டும் நீண்ட காலம் ஆயிற்று. இடையில் பல ஊர்களுக்குச் சென்று வந்தும் பதிவேற்றம் செய்யும் சூழல் அமையவில்லை. பதினோரு வருடங்களுக்கு முன் சென்று வந்த ஏலகிரிக்கு எங்கள் செழியுடன் சமீபத்தில் சென்று வந்தோம். சென்னையிலிருந்து சுமார் அய்ந்தரை மணி நேரப் பயணத்தில் அடையக் […]
சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள்

தற்காலத்திய வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய். சமீப வருடங்களில் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. சீரற்ற மாதவிடாயை இயற்கையான முறையில், யோகாசனப் பயிற்சியின் மூலம் ஒழுங்குபடுத்த முடியும். இன்று, சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள் குறித்து பார்க்கலாம். சீரற்ற மாதவிடாய் என்றால் என்ன? பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஒரு சில நாட்கள் முன் […]
மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்

உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டழற்சியின் வடிவங்கள் நூறுக்கும் மேற்பட்டவை. மூட்டழற்சிக்கான முழுமையான தீர்வு எதுவும் இல்லையென்று சொல்லப்பட்டாலும், மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சையளிக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் காணப்படுவது உண்டு. இன்றைய தினம், மூட்டழற்சிக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம். மூட்டழற்சி – முக்கிய வடிவங்களும் காரணங்களும் மூட்டழற்சியில் பல வடிவங்கள் இருந்தாலும், பொதுவான மூட்டழற்சி வடிவங்களாகக் கருதப்படுபவை: கீல்வாதம் (osteoarthritis) முடக்கு […]
வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

நடைப்பயிற்சி தரும் நன்மைகள் மற்றும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதற்கு முன்னர் பார்த்திருக்கிறோம். இன்று வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதற்கும் முன்னர் வெறும் கால்களில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். காலணி அணியாமல் வெறும் கால்களில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் காலணி அணியாமல் வெறும் கால்களால் நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் முக்கியமான சில நன்மைகள்: காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத […]
மலச்சிக்கலைப் போக்கும் 7 எசன்சியல் எண்ணெய்கள்

மலச்சிக்கலைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் கூறியிருந்ததைப் பற்றியும் மலச்சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் ஆசனங்கள் மூலம் மலச்சிக்கலை சரி செய்வது பற்றியும் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். இயற்கையான முறையில் மலச்சிக்கலைப் போக்கும் வழிமுறைகளில் எசன்சியல் எண்ணெய்களின் பயன்பாடும் ஒன்று. மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் மலச்சிக்கலைத் தீர்க்க உதவும் முக்கிய எசன்சியல் எண்ணெய்களில் சில: 1) Ginger Essential Oil […]