இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் நிமிர்ந்து படுத்தும் குப்புறப்படுத்தும் செய்யக் கூடிய எளிய ஆசனங்களை ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்காக இங்கே தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையை நீங்கள் அறிவீர்கள். நிமிர்ந்தும் குப்புறப்படுத்தும் செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்கள் வயிற்றுப் பகுதியைப் பலப்படுத்தி, வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன. முதுகுவலியைப் போக்குகின்றன.

நிமிர்ந்தவாறு படுத்து செய்யும் ஆசனங்கள் உடல் அசதியைப் போக்குகின்றன. தசைகளைத் தளர்த்துகின்றன. உடல், மன அழுத்தத்தைப் போக்குகின்றன. ஆக, ஆசனப் பயிற்சியின் முடிவில் செய்வதற்கு ஏற்ற ஆசனங்களாக நிமிர்ந்து படுத்து செய்யும் ஆசனங்கள் விளங்குகின்றன.

நிமிர்ந்தும் குப்புறப்படுத்தும் செய்யும் ஆசனங்கள் யாவும் உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகின்றன.

1) சேதுபந்தாசனம்

2) ஏக பாத சேதுபந்தாசனம்

3) சதுக்ஷ் பாதாசனம்

4) அர்த்த ஹலாசனம்

5) சுப்த பாதாங்குஸ்தாசனம்

16) மத்ஸ்யாசனம்

17) விபரீதகரணீ

18) சவாசனம்

மேற்கூறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து பயின்று வந்தால் உங்கள் உடல் நலம் மேம்படுவதை நன்கு உணர்வீர்கள்.

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான அமர்ந்து  செய்யும் 19 எளிய ஆசனங்களைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும். 

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான 30 எளிய நின்ற நிலையில் செய்யும் ஆசனங்களை பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்