Yoga Pose for Day 78 - One-Legged King Pigeon Pose (Eka Pada Rajakapotasana)

வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனம் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு சவால் விடும் ஆசனங்களில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் One-Legged King Pigeon Pose என்று அழைக்கப்படுகிறது. காகமும் புறாவும் மிக புத்திசாலியான பறவைகள் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. காகம் பற்றி நாம் காகாசனத்தில் குறிப்பிட்டிருந்தோம். பறவையால் மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ள முடியும் […]
Yoga Pose for Day 77 - Side Plank Pose (Vasisthasana)

வடமொழியில் ‘வசிஸ்த’ என்றால் ‘மிகச் சிறந்த’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Side Plank Pose என்று அழைக்கப்படுகிறது. வசிஸ்தாசனம் மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது. அன்பு, அமைதி ஆகிய பண்புகளை வளர்க்கவும், தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கவும் இவ்வாசனம் உதவுகிறது. வசிஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள் கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது இடுப்புப் பகுதியைப் […]
Yoga Pose for Day 76 - Goddess Squat (Uthkata Konasana)

இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்கட கோணாசனம். வடமொழியில் ‘உத்கட’ என்றால் ‘பலம் நிறைந்த’ மற்றும் ‘தீவிரமான’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது. இடுப்புப் பகுதியை வலுவாக்கவும் விரிக்கவும் செய்யும் உத்கட […]
Yoga Pose for the Day (75) - Reverse Warrior Pose

இதற்கு முன்னர் நாம் வீரபத்ராசனம் 1 மற்றும் வீரபத்ராசனம் 2 ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது விபரீத வீரபத்ராசனம். வடமொழியில் ‘விபரீத’ என்பதற்கு ‘மாற்று’, ‘மறுபக்கம்’ என்று பொருள். இவ்வாசனம் வீரபத்ராசனம் 2-ன் மாறுபட்ட ஆசனமாகவும் கருதப்படுகிறது. விபரீத வீரபத்ராசனம் ஆங்கிலத்தில் Reverse Warrior Pose என்று அழைக்கப்படுகிறது. விபரீத வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலைத் தருகிறது. இவ்வாசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுவதால் தன்னம்பிக்கை வளர்கிறது, பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் தன்மை […]
Yoga Pose for Day 74 - Peacock Pose (Mayurasana)

இன்று நாம் பார்க்கவிருப்பது நேற்றைய அஷ்டவக்கிராசனம் போல் கையால் உடலைத் தாங்கும் ஆசனமாகும். வடமொழியில் ‘மயூர’ என்றால் ‘மயில்’ என்று பொருள். இவ்வாசனத்தின் நிலை மயிலை ஒத்து இருப்பதால் மட்டுமே மயூராசனம் என்று அழைக்கப்படுவதற்கான காரணமாக இருக்க முடியாது. நளினம், அழகு, தைரியம், பலம் ஆகியவையின் கலவையே மயில். இவ்வாசனம் பழகுவதால் இத்தன்மைகள் அனைத்தும் நம்முள் வளரும் என்பது இப்பெயருக்கான காரணமாக இருக்கலாம். இது ஆங்கிலத்தில் Peacock Pose என்று அழைக்கப்படுகிறது. (அஷ்டவக்கிராசனம் பற்றி பார்க்க, இந்தப் […]