Yoga Pose for Day 48 – Rest Pose (Savasana)

இன்று பார்க்கவிருக்கும் ஆசனத்தில் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்பதால் வடமொழியில் இது சவாசனா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘சவ’ என்றால் ‘இறந்த உடல்’ என்று பொருள். இறந்த உடல் போல் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்பதால் இந்த ஆசனம் சவாசனா என்று வடமொழியிலும் சவாசனம் என்று தமிழிலும் Corpse Pose என்று ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு குறிப்பிடுவதை விட இதை சாந்தி ஆசனம், அதாவது அமைதி நிலை அல்லது ஓய்வு ஆசனம் என்றே குறிப்பிட விரும்புகிறேன். […]
19 Simple Seated Yoga Poses for Beginners

இது வரை நாம் பார்த்த ஆசனங்களில் ஆரம்பக் கட்ட பயிற்சியாளர்கள் எளிதில் பயிலக் கூடிய அமர்ந்த நிலை ஆசனங்களைத் தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசனத்தின் பலன்களையும் செய்முறையையும் நீங்கள் அறிவீர்கள். அமர்ந்து செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன் என்ன? அமர்ந்த நிலை ஆசனங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. தரையில் அமர்வதே ஒரு பயிற்சி. குழந்தைகள் இலகுவாகத் தரையில் அமர்ந்து எழுவது போல் பயிற்சி இல்லாத பெரியவர்களால் சுலபமாக எழ முடியாது. இடுப்பை இறக்கி தரையில் அமர்வது […]
Yoga Pose For Day 47 - Side Crow Pose (Parsva Bakasana)

வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள். காகாசனத்தில் கைகள் மடிக்கப்பட்டிருக்கும்; பகாசனத்தில் கைகள் நீட்டியபடி இருக்கும். இப்போது நாம் பார்க்க இருப்பது பார்சுவ பகாசனம். ‘பார்சுவ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘பக்கவாட்டு’. இதில் கைகள் மடித்து இருப்பதால் இந்த ஆசனத்தை பக்கவாட்டு காகாசனம், அதாவது Side Crow Pose என்று அழைப்பதே சரி. நாம் […]
Yoga Pose for Day 46 – Side Seated Angle Pose (Parsva Upavistha Konasana)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது. பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயின்று வந்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும். பார்சுவ உபவிஸ்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் இடுப்புப் பகுதியை நீட்சியடைய வைக்கிறது. முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது […]
Rules to Follow For A Successful Yoga Session - Everyday

யோகா பயில்வதற்கான விதிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் வைத்து ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். காலியான வயிறுடன்தான் ஆசனம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் செய்வது இன்னும் சிறப்பு. ஒரு கோப்பை நீர் அருந்தி விட்டு பயிற்சியைத் தொடங்கவும். காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தினால் குறைந்தது அரை மணி நேரம் பொறுத்துத்தான் ஆசனப் பயிற்சி செய்ய வேண்டும். உணவு உண்ட பின் பயிற்சி செய்வதாக […]