Yoga Pose for Day 40 – Balancing Bound Angle Pose (Dandayamana Baddha Konasana)

வடமொழியில் ‘தண்ட’ என்றால் ‘கம்பு’, ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’, ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’, ‘கோனா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால்கள் கைகளால் பிணைக்கப்பட்டு உடல் சற்று சாய்ந்து இருக்க புட்டத்தால் உடலை சமநிலையில் வைக்க வேண்டும். தண்டயமன பத்த கோணாசனத்தில் உடல் மட்டுமே சமநிலையில் வைக்கப்படுவதில்லை; மனதும் சமநிலைப்படுத்தப்படுகிறது. இந்த ஆசனத்தை பயில்வதால் சுவாதிட்டான சக்கரம் பலம் பெறுகிறது. இச்சக்கரமே உணர்வுகளோடு தொடர்புடையதாகவும் வளைந்து கொடுக்கும் பண்பையும் சூழலுக்கு ஏற்ப […]

Yoga Pose for Day 39 – Half Upright Seated Angle Pose (Ardha Urdhva Upavistha Konasana)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருளாகும். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் ஒரு காலை உயர்த்துவதால் இந்த பெயர் பெற்றது. அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது. தொடர்ந்து இவ்வாசனத்தைப் பயிலும் போது மனம் ஒருநிலைப்படுகிறது. அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் வயிற்று உள்உறுப்புகளின் செயல்பாடுகளைச் செம்மையாக்குகிறது. இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை […]

Yoga Pose for Day 38 – Balancing Table Top Pose (Dandayamana Bharmanasana)

வடமொழியில் ‘தண்ட’ என்ற சொல்லுக்குக் ‘கம்பு’ என்றும், ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’ என்றும் ‘பர்மா’ என்ற சொல்லுக்கு ‘மேசையை தாங்கும் பலகை’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் உடல் சமநிலையில் கட்டுப்படுத்தப்பட்டு மேசையைப் போல் இருப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது. தண்டயமன பர்மானாசனத்தில் வயிற்றுப் பகுதியும் முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகின்றன. தொடர்ப்பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதின் சமநிலை மேம்படுத்தப்படுகிறது. தண்டயமன பர்மானாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுப்பகுதியைப் பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பை நீட்சியடைய […]

Yoga Pose for Day 37 – Crow Pose (Kakasana)

காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள் மிக புத்திசாலியான பறவைகள், அவை சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை. காகாசனத்தில் நம்முடைய சுவாதிட்டான சக்கரம் தூண்டப்படுவதால் நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது. மேலும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மையையும் வளர்க்கிறது […]

Yoga Pose for Day 36 – Revolved Head-to-Knee Pose (Parivrtta Janu Sirsasana)

நாம் முன்னரே ஜானு சிரசாசனம் பற்றியும் அதன் பலன்கள், செய்முறை பற்றியும் பார்த்தோம். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்று பொருள். நாம் முன்னரே பார்த்தது போல் ‘ஜானு’ என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆக, இது வளைந்து திரும்பி காலை பிடிக்கும் ஆசனமாகும். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் சீரண மண்டலம் செம்மையாக இயங்குகிறது. முதுகுத்தண்டை மட்டுமல்லாமல் […]

English (UK)